Punctuation Marks - நிறுத்தற் குறிகள்


நாம் ஆங்கிலத்தில் பேசும் போது, ஆங்காங் கு நிறுத்தி கருத்துக்களைத் தெரிவிக்கிறோம். அவ்வாறு நிறுத்தாமல் தொடர்ந்து, பேசினால் பொருளைப் புரிந்து கொள்ள முடியாது. எனவே நாம் சில இடங்களில் நிறுத்திப் பேச வேண்டியுள்ளது. இதற்காக எழுதும் முறையில் பயன்படக்கூடியவையே நிறுத்தற் குறிகளாகும்.

இப்பொழுது சில முக்கிய நிறுத்தற்குறிகளை அவற்றின் பயன்களோடு பார்ப்போம்.

1. முற்றுப்புள்ளி (.) Full stop

a) வாக்கிய முடிவில் வரும்
எ.கா: I saw a lion yesterday.

b) சொல் கூறுக்கும், பெயர் முதலெழுத்துக்குப் பின்னும் பயன்படும்
எ.கா: M.P. (Member of Parliament) Sir C.V. Raman (initials)

2. கால் புள்ளி (,) Comma

a) ஒரே மாதிரியான அமைப்புடைய தொடர் வார்த்தைகளைப் பிரித்துக்காட்ட
எ.கா: I lost my lands, house, jewels and friends.

b) பெயர்ச் சொற்கள் ஒன்றையொன்று சார்ந்திருப்பின், அதற்கு முன்னும் பின்னும்
எ.கா: My sister, Prema, is a doctor.

c) நேர்க்கூற்று வாக்கியத்தில்
எ.கா: I said to her, I am busy now.

d) தொடர் வாக்கியத்தில், துணை வாக்கியத்தைப் பிரிக்க.
எ.கா: Man proposes, God disposes.

e) விடுபட்ட வார்த்தை குறிப்பாக வினைச்சொல்லைக் குறிக்க
எ.கா: Ravi received a watch, Ram, a pen.

3. அரைப்புள்ளி (:) Semicolon


a) வாக்கியத் தொடர் கமாவைக் கொண்டு துணை வாக்கியங்களைப் பிரித்துக் காட்ட பயன்படும்.

b) வாக்கியத் தொடர் சம்பந்தமில்லாமல் வருவதைப் பிரித்துக்காட்ட பயன்படும். வாக்கியத் டிடத் தொடர்

4. முக்காற்புள்ளி (:) Colon

a) மேற்கோள் குறிகளை அறிமுகம் செய்யப் பயன்படும்.

b) எடுத்துக்காட்டுகள், வரிசைப்படுத்துதல் போன்றவைகளில் பயன்படும்.

5. வினாக்குறி (?) Question mark

a) வினா வாக்கியத்தில். முற்றிப் புள்ளிக்குப் பதிலாக வரும்.
எ.கா: Why are you late?



6. உணர்ச்சிக் குறி (!) Exclamatory mark.

a) உணர்ச்சி வாக்கியங்களில் முடிவில் வரும்
எ.கா: How clever you are!

b) உணர்ச்சி சொற்றொடருக்குப் பின் வரும்.
எ.கா: Alas! He has lost his mother.

7. மேற்கோள் குறிகள் (") Quotes

நேர்க்கூற்றில், ஒருவர் பேசுவதை குறிப்பிடப் பயன்படும்.
எ.கா The teacher said to him, “you are wrong”.

8. இடைக்கோடு (-) Dash

பேசுவதில் (அ) எண்ணத்தில் ஏற்படும் திடீர் மாற்றத்தைக் குறிப்பிட உதவும்.

9. ஹைஃபன் (-) Hyphen

ஒரே பொருளைக் குறிக்கும் பல கூட்டுச் சொற்களின் இடையில் வரும்
எ.கா: Father-in-law
Time - Table

10. கொட்டை எழுத்துக்கள் (Capital)

a) வாக்கியத் தொடக்கத்திலும்

b) கவிதையின் ஒவ்வொரு வரியின் தொடக்கத்திலும்

c) சிறப்புப் பெயர்ச் சொல்லின் ஆரம்பத்திலும்

d) கடவுளைக் குறிக்கும் பெயர்ச்சொல் மற்றும் அதன் பிரதிப் பெயர்ச் சொல்லைக் குறிக்கவும்.

e) டிகிரிகளை குறிக்க ஆரம்பத்திலும்

f) நேர்க்கூற்று வாக்கியத்தின் தொடக்கத்திலும் Capital எழுத்துக்களைப் பயன்படுத்த வேண்டும்.


Latest Release


Future Tense - எதிர்காலம்

A) Simple future (சாதாரண எதிர்காலம்)

Past Tense - இறந்த காலம்

(A) Simple past - சாதாரண இறந்த காலம்a...

Present Tense - நிகழ்காலம்

(A) Simple present - (சாதாரண நிகழ்காலம்)a) வழ...

Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)

ஒப்பிடுதல் 3 நிலைகளை உடையவை. அவை:

Direct & Indirect Speech (நேர்க்கூற்றும், அயற்கூற்றும்)

ஒருவர் கூறும் வார்த்தைகளை நாம் ...