Adverb (வினையுரிச்சொல்)


An adverb is a word which modifies the meaning of a verb, or adjective or another adverb.
(Adverb என்பது ஒரு வினைச் சொல் (அ) ஒரு பெயர் உரிச்சொல் அல்லது ஒரு வினையுரிச்சொல் ஆகியவற்றின் பொருளை மாற்றி அமைக்கும் பதமாகும்.)

Examples:
i) Rama goes to school daily.
ii) Sita sings well.
iii) The Rose is very attractive.

Types of Adverb (வினையுரிச்சொல்லின் வகைகள்)

1. Adverb of manner - பண்பு வினையுரிச்சொல்

ஒரு வினை எவ்வாறு நடைபெறுகிறது என்பதை உணர்த்தும் வினை உரிச் சொல் பண்பு வினை உரிச்சொல் எனப்படும் இச்சொல்லின் பொருளுக்கு முன் how? (எவ்வாறு) என்ற வினாவினை எழுப்பினால், விடையாக கிடைக்கும் சொல்  "Adverb of manner" ஆகும்.

Examples:
i) Govind reads clearly.
ii) He writes neatly.

2. Adverb of place - இடத்தைக் குறிக்கும் வினையுரிச்சொல்

ஒரு வினை நடைபெறும் இடத்தை அறிவிக்கும் வினையுரிச்சொல்லை Adverb of place என்பர். இதில் வினைச் சொல்லுக்கு முன் Where (எங்கே) என்ற வினா எழுப்பினால் விடையாக கிடைக்கும் சொல் Adverb of place ஆகும்.

Examples:
i) The train stops here
ii) My father has gone out

3. Adverb of Time - காலத்தைக் குறிக்கும் வினையுரிச்சொல்

ஒரு வினை எப்பொழுது (அ) எவ்வளவு காலம் நடைபெறுகிறது என்பதைக் குறிக்கும் வினையுரிச் சொல்லே Adverb of time ஆகும்.

இதில் வினைச் சொல்லுக்கு முன் When? (எப்பொழுது) என்ற வினாவினை எழுப்பினால் விடையாக கிட்ைக்கும் சொல் Adverb of time ஆகும்.

Examples:
i) The holidays will begin tomorrow.
ii) I shall return soon

4. Adverb of frequency - எண்னைக் குறிக்கும் வினையுரிச்சொல்

ஒரு வினை  எத்தனை தடவை நடைபெறுகிறது என்பதைக் குறிக்கும் வினை உரிச்சொல்லே (Adverb of frequency)ஆகும். இதில் வினைச் சொல்லுக்கு முன் How often அல்லது  How many times என்ற வினாவினை எழுப்பினால் விடையாகக் கிடைப்பது Adverb of frequency ஆகும்.

Examples:
i) I have told you twice.
ii) The postman called again.

5. Adverb of degree or quantity - அளவைக் குறிக்கும் வினையுரிச்சொல்

ஒரு வினை எந்த அளவு பயன்படுகிறது என்பதை உணர்த்தும் வினையுரிச்சொல் Adverb of degree என்பர். வினைச் சொல்லுக்கு முன்  How much (அ) in what degree என்ற வினாவினை  எழுப்பினால் கிடைப்பது Adverbs of degree ஆகும்.

Examples:
i) The sea is very stormy.
ii) I am so glad
iii) These mangoes are almost ripe.



6. Adverb of affirmation or negation

உறுதி அல்லது இல்லை என்பதைக் குறிக்கும் வினையுரிச்சொற்கள்

Examples:
i) Surely you are mistaken
(Adverb of affirmative)

ii) I do not know him.
(Adverb of Negation)


7. Adverb of Reason - காரணத்தைக் குறிக்கும் வினையுரிச்சொல்

ஒரு வினைக்கான காரணத்தை வினையுரிச்சொல் குறிக்குமானால் அது  Adverb of reason எனலாகும்.

Examples:
i) He is poor. He therefore left school.
ii) He is suffering from fever. He is hence unable to attend class.

8. Interrogative adverb - கேள்வியைக் குறிக்கும் வினையுரிச் சொல்

வினையுரிச்சொல் வினாவினை எழுப்பப் பயன்படுமாயின் அவை  Interrogative adverb எனப்படும் .

Examples:
i) Where is Muthu?
ii) Why are you late?

9. Relative adverb

வினையுரிச் சொல் ஒரு வார்த்தையை தழுவி வருவதுடன் அதற்கு முன் வரும் ஒரு பெயர்ச் சொல்லையும் குறிக்கும்.

Examples:
i) Do you know the time when the Tamilnadu express arrives?
(Where - relative adverb, the time - noun.)

ii) This is the reason why I left.
(Why - relative adverb, the reason - noun)


Latest Release


Future Tense - எதிர்காலம்

A) Simple future (சாதாரண எதிர்காலம்)

Past Tense - இறந்த காலம்

(A) Simple past - சாதாரண இறந்த காலம்a...

Present Tense - நிகழ்காலம்

(A) Simple present - (சாதாரண நிகழ்காலம்)a) வழ...

Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)

ஒப்பிடுதல் 3 நிலைகளை உடையவை. அவை:

Direct & Indirect Speech (நேர்க்கூற்றும், அயற்கூற்றும்)

ஒருவர் கூறும் வார்த்தைகளை நாம் ...